
திருக்குடும்பத்தின் மீது நீர் அக்கறைக்கொண்டு இருக்கும் போது ஆண்டவரின் தூதர் உமது கனவில் தோன்றி, உம்மை எச்சரிக்கவும், வழிகாட்டவும் செய்தார்.
நீர் அமைதியானவர், திடம்படைத்தவர், விசுவாசமும் தைரியமும் உள்ள பாதுகாவலர்.
நீர் இறைவனிடத்தில் நித்திய சமாதானத்தில் இளைப்பாறுகையில் எங்களை தயவுகூர்ந்து பாரும்.
எங்கள் தேவைகளை (உங்கள் கோரிக்கைகளையை குறிப்பிடுங்கள்) உமது இதயத்தில் கேட்டருளும்.
எங்கள் தேவைகளை நினைத்து பாரும் அவற்றை உமது அன்பு மகனிடம் இருந்து எங்களுக்கு பெற்று தந்தருளும்.
நான் தூக்கத்தில் கடவுளின் குரலை கேட்கவும், அதன் படி எழுந்து அன்புடன் செயல்படவும் எனக்கு உதவியருளும்.
புனித சூசையப்பரே நான் உம்மை நேசிக்கின்றேன், மகிழ்ச்சியோடு கடவுளை புகழ்ந்து நன்றி செலுத்துகிறேன்.
- ஆமென்