Wednesday, May 12, 2010

எபிக்டீடஸின் பொன்மொழிகள் பாகம்-I

வாழ்கை என்னும் மகத்தான விருந்தை சக மனிதர்களோடு பகிர்த்துகொள்ள முயற்சி செய்.
அனால், நான் ஒருவரை மட்டும் திருப்திப்படுத்த வேண்டும், கீழ்படிய வேண்டும், அவர் தான் கடவுள். அவர் என்னை நம்பி என்னை ஒப்படைத்து இருக்கிறார்.

ஒரு நாள் என் வீட்டின் முட்ரத்தில் வெள்ளி குத்துவிளக்கு ஒன்று வைத்திருந்தேன். முட்ரத்தில் இருந்து சத்தம் வர வெளியே வந்து பார்த்தேன், நான் வைத்து வெள்ளி குத்துவிளக்கு திருட்டு போயிருந்தது. நான் கூறினான் "நண்பனே, நாளை நீ வரும் போது ஒரு மண்விளக்கையே பார்ப்பாய், ஏன் என்றல் ஒருவன் எதை வைத்திருகின்றனோ அதை மட்டுமே இழக்க முடியும்".

சோவின் " ஜட்ஜ்மென்ட் ரிசேர்வட்" (Judgement Reserved)

சென்ற வாரம் தூத்துக்குடி சென்று வந்தேன், ரயில்வே ஸ்டேஷனை அடித்தவுடன் ஹிக்கின்போதம்மில் சோவின் "ஜட்மென்ட் ரிசேர்வட்" புத்தகத்தை வாங்கி விட்டு ரயிலில் ஏறினேன். பாதி புத்தகத்தை தூத்துக்குடிக்கு செலும் பொழுது படித்தேன், மற்ற பாதியை சென்னைக்கு திரும்பும் பொழுது படித்து முடித்தேன்.

நல்ல நாடகம், இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதி கதையாக இருந்தாலும் இன்றைய காலத்திற்கும் மிகவும் பொறுந்துகிறது. இன்றைய இளைஞர் சமுதாயம் எந்த பாதையை நோக்கி சென்று கொண்டு இருகிறது என்பதை சுட்டி காட்டுகிறது. சினிமா, அரசியல், சமுதாயம் ஆகியவற்றின் அன்றைய (இன்றைய) நிலையை இந்த புத்தகம் எடுத்து காடுகிறது.

சோவின் "துக்ளக்" நாடகம் படித்தத்தில் இருந்து அவர் விசிறி ஆகி விட்டேன். தமிழில் "பொலிடிகல் சட்டேர்" (Political Satire) எழுதுவதில் இவர் வல்லவர்.