Friday, February 17, 2012

நான் யார் தெரியுமா ? - புதிரீடுகள்

இன்று நாம் சுய-குறிப்பு அல்லது சுய-நோக்கு புதிரீடுகளை(Self-Referential Paradoxes) பற்றி பார்ப்போம்.

இந்த வகை புதிரீடுகளை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ரேனே மக்ரிட்டே(Rene Magritte) என்ற பெல்ஜியம் நாட்டு ஓவியர் தான் நினைவுக்கு வருவார். அவர் ஒரு புகை பிடிக்கும் குழாயை(Cigarette Pipe) வரைந்து, அதற்கு பக்கத்தில் "இது புகை பிடிக்கும் குழாய் அல்ல" என்று எழுதி வைத்திருந்தார். (Refer: http://en.wikipedia.org/wiki/The_Treachery_Of_Images).

அதாவது இது வெறும் படம் தான், உண்மை அல்ல என்று தெரிவிக்கவே அவர் இவ்வாறு எழுதி வைத்திருந்தார்.

சரி ரீமஸ், மேட்டருக்கு வா, "சுய-குறிப்பு புதிரீடுகள்" என்றால் என்ன ? ஓகே !!!
இதை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறேன்:

"இந்த வாக்கியம் உண்மை அல்ல." - சுய-குறிப்பு புதிரீடு.

இந்த வாக்கியத்தை உண்மையாக எடுத்து கொண்டால், அது பொய்யாக மாறிவிடும். இதை பொய்யாக எடுத்து கொண்டால், அது உண்மையாக மாறிவிடும். இப்படி தனக்கு தானே சுற்றி கொண்டிருக்கும். இதை "பொய்காரனின் புதிரீடு"(Liar's Paradox) என்று அழைப்பார்கள்.

இந்த மாதிரி புதிரீடுகளை முதலில் கையாண்டவர் கிரேட்டே(Crete) நாட்டை (கிரேக தீவு) சேர்த்தவர். இவர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்த்த ஒரு சிந்தனையாளர்(நான் அவரை ஞானி(Philosophers) என்று அழைக்க விரும்பவில்லை).

இவரது புதிரீடு:
"கிரேட்டே நாட்டை சேந்தவர்கள் எல்லோரும் உண்மையை பேச மாட்டார்கள்."

இவர் சொன்னதை உண்மை என்று எடுத்து கொண்டால், இவரும் உண்மை பேச மாட்டார் (ஏன் என்றால் இவர் கிரேட்டே நாட்டை சேந்தவர்).
இவர் சொன்னதை பொய் என்று எடுத்து கொண்டால், இவர் உண்மை பேசுவார்(ஏன் என்றால் இவர் கிரேட்டே நாட்டை சேந்தவர்) ஆனால் இவர் சொன்னது பொய்யா ?

இன்னொரு உதாரணம்:
ஒரு முறை கிருஷ்ணா தேவராய, தெனாலி ராமனை அழைத்து "நீ ஒறு வாக்கியம் கூறவேண்டும், அது உண்மையானால் உன்னை தூக்கில் போடுவேன், அது பொய்யானால் உன் தலையை வெட்டி விடுவேன்" என்று கூறினார். அதற்கு தெனாலி பொறுமையாக "மன்னா, என் தலையை வெட்டப்படும்." என்று கூறி உயிர் தப்பினார்.

சுய-குறிப்பு புதிரீடுகளை கொண்டு நாம் சுயதை பற்றி ஆராயலாம். "சுயம்"(Self) என்றால் என்ன, அது எங்கு இருந்து வந்தது ? மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்து காட்டுவது "சுய-சிந்தனை"(Self-Consciousness/Self-Awareness). மனிதனால் மட்டுமே அவனை அவனிடம் இருந்து பிரித்து, அவனை பற்றி சிந்தனை செய்து பார்க்க முடியும்.

"நான் யார் .. நான் யார்.." என்று நம்மை நாமே கேட்டுகொண்டே போனால், நாம் முடிவற்றவர்கள்(Infinite Beings) என்று தெரியும்.

இனி யாராவது உங்களை பார்த்து "நான் யார் தெரியுமா?" என்று கேட்டால், "முதலில் நீ யார் என்று உனக்கு தெரியுமா?" என்று மாற்றி கேளுங்கள்.

No comments:

Post a Comment